யார் யார்? எந்தெந்த துறை அமைச்சர்?... வெளியான லிஸ்ட்.. தயாரான திமுக.!
DMK Ministers List may Be Ready 3 May 2021
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது.
நேற்று மாலை பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து, மாலை முதலாகவே மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கியது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில், திமுகவில் யார் யாருக்கு எந்தெந்த பதவிகள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, " தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை சபாநாயகராக சக்கரபாணி, முதலமைச்சராக மு.க ஸ்டாலின், நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன், மின்சார துறை அமைச்சராக ஐ.பெரியசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக கே.என் நேரு, உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி, கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு ஆகியோரும்.,
விவசாயம் மற்றும் அதன் சார்ந்த துறை அமைச்சராக எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சராக ஏ.வ வேலு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக சாமிநாதன், சட்டத்துறை அமைச்சராக சுப்பிரமணியன், தொழில்துறை மற்றும் கனிம வளங்கள்துறை அமைச்சராக முத்துச்சாமி, பால்வளத்துறை அமைச்சராக ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சராக ராஜேந்திரன், தமிழ் மொழி கலாச்சாரம் துறை அமைச்சராக பிச்சாண்டி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் எழிலன் ஆகியோரும்,

மாநகராட்சி துறை மற்றும் மாநகராட்சி மேம்பாடு போன்ற துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ராஜா, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி. வரிகள் மற்றும் வருவாய் தொடர்பான அமைச்சராக வெற்றி அன்பழகன், கைத்தறி, விசைத்தறி மற்றும் துணிகள் உற்பத்தி டெக்டைல்ஸ் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி ஆகியோரும்,

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக தமிழரசி, மீன்வளத்துறை அமைச்சராக சேகர்பாபு, சிறு தொழில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைச்சராக ரகுபதி, சுற்றுலாத்துறை அமைச்சராக காதர்பாட்சா முத்துராமலிங்கம், செய்தித்துறை அமைச்சராக மனோ தங்கராஜன், தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சராக அப்துல் வகாப், இந்து மத சமய அறநிலையத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக வரலட்சுமி ஆகியோர் அமைச்சர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
DMK Ministers List may Be Ready 3 May 2021