சிறுமியின் புகைப்படம் ஸ்டேட்டஸில் வைத்த மாணவர் மீது தாக்குதல் – பல்லாரியில் பரபரப்பு
Attack on a student who put a girls photo as status commotion in Pallari
பல்லாரியில், 18 வயதிற்குட்பட்ட சிறுமியுடன் எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வெளியிட்டதற்கு, ஐ.டி.ஐ. மாணவர் மீது சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் இணைந்து கிரிக்கெட் மட்டை, இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாரி மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்தவர் தொட்ட பசவா . 19வயதான இவர், ஐ.டி.ஐ.யில் படித்து வரும் போது 18 வயது நிரம்பாத சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது காலேஜில் நடந்த நிகழ்ச்சியில் சிறுமியுடன் சேர்ந்து அந்த வாலிபர் புகைப்படம் எடுத்திருந்த புகைப்படத்தை தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்திருந்தார்.
இது சிறுமியின் அண்ணனுக்கு தெரியவர உடனே அவர் ஆத்திரமடைந்த அவர் ஐ.டி.ஐ.க்கு தனது நண்பர்களுடன் சிறுமியின் அண்ணன் சென்று அங்கு மைதானத்தில் வைத்து தனது தங்கையின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்தது குறித்து தொட்ட பசவாவுடன் அவர் சண்டை போட்டுள்ளனர் .
அதுமட்டுமல்லாமல் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் சேர்ந்து தொட்ட பசவாவை கண்மூடித்தனமாக கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். தன்னை விட்டு விடும்படி அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் தொட்ட பசவா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பல்லாரி டவுன் போலீசார், சிறுமியின் அண்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவான நபர்களில் பலர் மாணவர்கள் ஆவார்கள். அதே நேரத்தில் தொட்ட பசவாவை 10 பேர் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Attack on a student who put a girls photo as status commotion in Pallari