மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் தலைவராக அமைச்சரின் தயார் நியமனம்.!  - Seithipunal
Seithipunal


மதுரையில் பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கருமுத்து தி.கண்ணன் என்பவர் தக்காராக பதவி வகித்தார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி காலமானார். 

இதையடுத்து கோயில் தக்காராக இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரை நியமிக்கப்பட்டார். உறுப்பினும், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், நவ.6-ம் தேதி ஐந்து பேரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்தார். 

இதில் அமைச்சர் பழனிவேல் தியாராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், மதுரை அண்ணாநகர் தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா, மதுரை கே.கே.நகர் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மு.சீனிவாசன், உயர்நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதியின் மனைவி எஸ்.மீனா, மதுரை காந்தி நகரைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டி.சுப்புலெட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 2023 டிசம்பர் 1ம் தேதி அறங்காவலர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். ஆனால் அன்றைய தினம் அறங்காவலர்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அரசாணையின்படி, திருக்கோயிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 48ன் கீழ் அறங்காவலர் குழு தலைவர் அரசின் மூலம் தேர்வு செய்வதற்கு மதுரை இணை ஆணையர் பரிந்துரை செய்தார்.

அதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு அனுப்பிவைத்தார். இதையடுத்து, அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் குறித்த விதிகளில் விதி 18ஏ-ன்படியும் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழுவின் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியில்லாமல் நியமனம் செய்யப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister mother rukmani oazhanivelrajan appointed madurai meenakshi amman trustee committee


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->