'இந்தியத் திரைத்துறைக்கு பேரிழப்பு'; பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய இசையுலகில் கானக்குயில் என்று அழைக்கப்படும் பின்னணி பாடகி  எஸ். ஜானகி அம்மா தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில்  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜானகியின் இறப்பு செய்தி சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது;

''இசைக்குயில் திருமிகு எஸ். ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்.

அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK leader MK Stalin condoles the death of famous playback singer S Janaki


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->