இந்திய அணியை White wash செய்த இங்கிலாந்து அணி; T20I தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து; சறுக்கிய இந்தியா..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.  இதன் முதல் போட்டி மழையால் முதல் இன்னிக்ஸுடன் கைவிடப்பட்ட து. அடுத்த 03 ஆட்டங்களிலும் இந்தியா படு தோல்வியடைந்தது. 

தொடரை இழந்துள்ள நிலையில் இன்று ஆறுதல் வெற்றியாவது பெரும் எண்ணத்தில் களமிறங்கியது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி போட்டி சவுத்டமில் இன்று இரவு 07 மணிக்கு தொடங்கியது. தொடரை முழுமையாக கைப்பற்றும் வகையில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டி விளையாடியது. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. அணியின் சார்பாக ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி, 64 பந்துகளில் 131 ரன்களை குவித்தார்.

258 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வி அடைந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாக ஹரி புரூக் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தொடர் வெற்றியின் மூலம் டி 20 தரவரிசிசையில் முதல் இடத்தில் இருந்த இந்தியா 02 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதோடு, முதல் இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England whitewashes India in T20I series


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->