திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல! வள்ளலார் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு! - Seithipunal
Seithipunal


என்னைப் பற்றி அவதூறு பரப்பக்கூடியவர்களுக்கு பதில் சொல்லக்கூடிய விழா!

சென்னையில் இந்து சமய அறநிலை துறை சார்பில் நடைபெற்ற வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஜெயந்தி விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்பு விழாவில் பேசிய அவர் "பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும், அறிவித்த நமது திராவிட மாடல் அரசு திருவருட்பிரகாசம் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்திருக்கிறது. 

வள்ளலார் பிறந்த 200 ஆண்டுகள், அவர் தொடங்கிய கருணை சாலைக்கு 156 ஆண்டுகள் மற்றும் அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை பார்த்து சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் அதிர்ச்சியாக கூட இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை என் மீது வரக்கூடிய அவதூறுகளுக்கு பதில் சொல்லக்கூடிய விழா தான் இது. திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது! திராவிட மாடல் என்பது நம்பிக்கை எதிரானது! இவ்வாறு மதத்தை வைத்து பிழைக்க கூடிய சில நாட்டிலேயே பேசி வருகின்றனர்.

மீண்டும் இதைக் குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் முன்னாடி சொன்னதை மட்டும் எடுத்துக் கொண்டு பின்னாடி சொன்னதை வெட்டிவிட்டு சில சமுக ஊடகங்கள் வெளியிடும். அதனால் முன்கூட்டியே அதை உங்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

நான் தெளிவோடு சொல்ல விரும்புவது ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல திமுக. திராவிட மாடல் திமுக ஆட்சி ஆன்மீகத்தை அரசியலுக்காகவும் தங்களது சொந்த சுயநலத்துக்காகவும் உயர் தாழ்வு கற்பிப்பதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுபவர்களுக்கு எதிரானது. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று பிற்போக்குத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவனின் மண்தான் இந்த தமிழ் மண். அன்னதானம் வழங்குவது மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல. ஜாதி, மத வேறுபாடுகளற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவதே வள்ளலார் ராமலிங்க அடிகளார் வழியில் நடப்பது" என பேசினார். 

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்படும். அதற்கு ரூ. 3.28 கோடி ஒதுக்கீடு செய்தும், வள்ளலார் அவர்களின் சிறப்பு நூல் மற்றும் தபால் தலையை முதல் ஸ்டாலின் வெளியிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK is not against spirituality Stalin speech at the Vallalar Jubilee Festival


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->