திமுக நகராட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர்களே ஊழல் புகார்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி பெண் தலைவராக இருக்கும் திமுக சேர்ந்த முனவர் ஜான் என்பவரை மாற்றக் கோரி நகராட்சியை சேர்ந்த திமுக துணைத்தலைவர் தோட்டம் பாஷா உட்பட 18 திமுக கவுன்சிலர்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 20 கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் பால்ராஜை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். 

இந்த பள்ளப்பட்டி மாநகராட்சியானது 27 வார்டுகளை கொண்ட நிலையில் பெரும்பாலான கவுன்சிலர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் நகர மன்ற பெண் தலைவராக திமுகவைச் சேர்ந்த முனவர் ஜான் இருந்து வருகிறார். இவர் நகராட்சிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக செய்யாமல் கட்டுமான பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக முடிவெடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த பெண் நகராட்சி தலைவருக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி தலைவரை மாற்றாத பட்சத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்த ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK councilors complain against DMK Municipal President


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->