ஆக்சனிற்கு தயாரான தலைமை.. உற்சாகமான தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மாவட்ட வாரியான பாதிப்புகள், கடந்த சில வாரமாக கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. 

தமிழகத்தின் கொரோனா பாதிப்பை பொறுத்த வரையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,663 ஆக உயர்ந்துள்ளது. 1,62,691 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழாவது முறையாக நீட்டிப்பு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்கத்தில் இருந்தே தமிழக அரசு கொரோனா விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்றும், மரணத்தை மறைகிறது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தோல்வியை தழுவியுள்ளது என்று திமுக குற்றம் சுமத்தி வருகிறது.

மேலும், அவ்வப்போது திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம், கட்சியின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், வரும் 30 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கபட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Call party meeting


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal