காமாலைக்காரன் கண்ணுக்கு., அரண்டவன் கண்ணனுக்கு., பழமொழிகளை உண்மையாக்கிய கண்டைனர் லாரி சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கு இன்னும் 11 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், வாக்கு இயந்திரத்தில் கள்ள ஓட்டு போடுவதற்கு கண்டெய்னர் லாரிகளில் அமர்ந்து மர்மநபர்கள் வாக்குச் சாவடியை கண்காணிப்பதாக பொய்யான தகவல் எதிர்கட்சிகளால் பரப்பப்பட்டது. 

இதனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் கட்சியினர், தாங்களாகவே கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட நிலையில், தொழில்நுட்பம் மூலமாக கள்ளஓட்டுகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

காமாலைக்காரனுக்கு கண்களில் கண்டதெல்லாம் மஞ்சள் தான் என்று ஒரு பழமொழி உண்டு. அது போன்ற மன நிலைக்கு தற்போது அரசியல் கட்சியினர் மாறியுள்ளனர். வெறும் பெட்டியில் தொடங்கி, கண்டெய்னர் லாரி வரை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில், சர்ச்சை கருத்துக்களை அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சைகளுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி தீயை எரிய வைப்பது போல, வாக்குச்சாவடிகளுக்கு அருகே திடீரென எதற்ச்சையாக லாரிகள் தோன்றி, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழியை உறுதி செய்தது. 

இது தொடர்பாக தென்காசியில் தொடங்கிய சர்ச்சை புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் என பல்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்களாக நடைபெற்றது. மேலும், கள்ள ஓட்டு ஹேக்கிங் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் விசாரிக்கையில், இணையதளம் மூலமாக ஹேக்கிங் செய்து வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு வாக்கையும் மாற்ற இயலாது. 

ஒருவேளை வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்குகளை மாற்றினால், கட்சியின் சின்னம் பிரிண்ட் ஆகி இருக்கும் வி.வி. பேட் பாக்ஸில் உள்ள சீட்டுகளை எப்படி ஹேக் செய்து மாற்ற முடியும்? அல்லது அந்த சீட்டை எப்படி அகற்றி மாற்று வாக்குசீட்டுகளை பதிவு செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • காமாலைக்காரனுக்கு கண்களில் கண்டதெல்லாம் மஞ்சள்.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK and Alliance Parties Funny Moment about Container Lorry Issues TN Election 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->