சுமைப்பணியாளர்களுக்கு பல்வேறு நிதிபயன்கள் கிடைக்க வேண்டும் ; மாவட்ட சங்க கூட்டத்தில் தீர்மானம்..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.

மேலும், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் முருகையன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜானகிராமன், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,

* தனி நலவாரியம் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். 

* அரசு நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாகத்தில் பணி புரியும் சுமை பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்யும் முறையில் தனியார் மயமாக்கும் உத்தரவினை வாபஸ் பெற வேண்டும். 

* தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்க வேண்டும். 

* விபத்து காப்பீடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நலநிதி உள்ளிட்ட நிதி பயன்களை வழங்க வேண்டும். பணி நேரத்தில் சுமை பணி தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும். 

* தொழிலாளர் நல வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்தை தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District meeting of Samipresi Labor Union


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->