மக்களை ஏமாத்தாதீங்க! நாங்க எதுக்கு ஒன்று திரளணும்! அப்போ நீங்க எதுக்கு அமைச்சர்! அமைச்சர் மா.சுப்ரமணியத்தை விளாசிய மோகன் ஜி! - Seithipunal
Seithipunal


போதை கலாச்சாரத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேச்சுக்கு  இயக்குனர் மோகன் ஜி சமூக வலைதளங்களில் பதில் அளித்துள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, இளைஞர்களுக்கு பாதிப்பு தரும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

போதை கலாச்சாரத்துக்கு எதிராக இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரள வேண்டும். போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் மோகன் ஜி தெரிவித்ததாவது, நீங்கதான் ஆட்சியாளர் சார். யாரை ஒன்று திரண்ட சொல்றீங்க. ஒரே கயத்தில் எல்லா விதமான போதை பொருள்களையும் தடை பண்ணலாம். வியாபாரத்தை தடுக்கலாம்.

எதுக்கு இப்படி மக்களை ஏமாத்தறீங்க? என்று சமூக வலைதளர் பக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவுத்துள்ள பதிவு பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சமூகவலைத்தளத்தில் பலரும் மோகன் ஜியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Mohan Ji responded on social media to Minister M Subramanian speech that we should unite against drug culture


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->