தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: காரணம் என்ன?
Dindigul sanitation workers protest
திண்டுக்கல், பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு போதிய சம்பளம், குறிப்பிட தேதியில் கிடைக்கவில்லை எனவும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாகவும் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.
இருப்பினும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் தூய்மை பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்களின் இந்த தொடர் போராட்டத்தால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Dindigul sanitation workers protest