இதமான வானிலையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வாரத்தின் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

வானிலையும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கைகொடுத்ததால், காலை முதல் மாலை வரை இதயம் வருடும் இதமான வானிலை நிலவியது. மேலும், தரைதட்டி இறங்கிய மேகக்கூட்டங்களை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Kodaikanal Tourist Peoples Enjoy Climate


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->