திண்டுக்கல்: காதலை ஏற்க மறுத்த காதலனின் வீட்டார்.. வீட்டிற்கு முன் போராட்டம் நடத்தி விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பகுதியை சார்ந்தவர் ரம்யா (வயது 28). ரம்யா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், இதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சார்ந்த அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்கின் பெற்றோர் மற்றொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள அசோக் மறுப்பு தெரிவிக்கவே, காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்துள்ளனர். கடந்த மாதத்தின் போது சென்னைக்கு வந்த அசோக்கின் உறவினர்கள், அவரது தந்தைக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ரம்யா அசோக்கின் வீட்டிற்கு சென்று கணவரை தன்னுடன் அனுப்ப கூறி முறையிட்டுள்ளார். அந்த சமயத்தில், அசோக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திட்டவே, மனமுடைந்த பெண்மணி கணவரின் வீட்டு முன்னதாகவே விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கவே, இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul girl Ramya Love Failure attempt suicide in front of Love Boy House


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal