சட்டமன்ற தேர்தல்; சென்னையில் 6 திமுக சிட்டிங் எம்எல்ஏ-க்கு நோ சீட்; புதிய வேட்பாளர்கள் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சென்னையில் போட்டியிட்டு தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 06 பேருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதன்படி, சென்னை எழும்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று  தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஐ.பரந்தாமன் அவர்களுக்கு கு வரும் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக எழும்பூர் (தனி) தொகுதியில் திமுக சார்பில் தமிழன் பிரசன்னா போட்டியிடுகிறார்.

அதேபோன்று சென்னை தியாகராய நகரில் திமுக சார்பில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெ.கருணாநிதிக்கு பதிலாக ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தற்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வெற்றியழகன். வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கார்த்திக் மோகன் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

அண்ணா நகர் தொகுதியில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, கடந்த 02 முறை தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருக்கிறவர் கே.மோகன்.  ஆனால், அவருக்கு இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சிற்றரசு போட்டியிட உள்ளார்.

அத்துடன், திருவிக சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய 02 முறை எம்.எல்.ஏவாக தேர்வான தாயகம் கவி-க்கு பதிலாக கே.எஸ்.ரவிசந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் ஜெயக்குமாரை வீழ்த்தி எம்.எல்.ஏவாக வென்றவர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி. அவருக்கு பதிலாக 2026 தேர்தலில் திமுக சார்பில் சுபேர்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, சென்னையில் மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 14 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது. இதில், வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six sitting DMK MLAs in Chennai were denied tickets


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->