தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த்..!
DMDK Releases Candidate List for the 10 Constituencies It Is Contesting
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மே மாதம் 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்தலில், திமுகவி மெகா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10 தொகுதிகளிலும், விசிக 08 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 05 தொகுதிகளிலும், மதிமுக 04 தொகுதிகளிலும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி 02 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இதில் சென்னையில் சிட்டிங் எம்.எல்.ஏ க்கு 06 பேருக்கு பதிலாக புதியவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கூட்டணி கட்சிகள் சில திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 11 தொகுதிகளில் போட்டியிடயுள்ளன. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 175 தொகுதிகள் களம்காண உள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்
1) விருதாச்சலம் - பிரேமலதா விஜயகாந்த்
2) விருதுநகர் - விஜயபிராபகரன்
3) தர்மபுரி - டாக்டர் இளங்கோவன்
4)குடியாத்தம் ( தனி ) - பிரதாப்
5)சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ்
6) போளூர் - சரவணன்
7)பல்லாவரம் - அனகை முருகேசன்
8)திருத்தணி - D.கிருஷ்ணமூர்த்தி
9)ஓமலூர் - A.R.இளங்கோவன்
10)மைலம் - எல்.வெங்கடேஷன்
English Summary
DMDK Releases Candidate List for the 10 Constituencies It Is Contesting