உத்தரப் பிரதேசத்தில் சிறுமி சடலம் மாவு டிரம்மில் கண்டெடுப்பு...! - குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் நகர் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 29 வயதான சுனில், தனது முதலாளியின் வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், முதலாளியின் 8 வயது மகள் சிப்ஸ் வாங்க வீட்டிலிருந்து வெளியேறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பதட்டத்தில் ஆழ்ந்தனர்.

இந்த தகவல் அறிந்த சுனில், உடனடியாக அக்கம் பக்கத்தவர்களை திரட்டி, “கவலைப்பட வேண்டாம், குழந்தையை கண்டுபிடித்து விடலாம்” என்று கூறி தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

மேலும் காவலர்களுக்கு தகவல் அளித்து உதவியதால், ஆரம்பத்தில் அவர்மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.இரண்டு நாட்கள் கடந்தும் சிறுமி பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், சுனில் தங்கி இருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.

இதில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு இருந்த மாவு தொட்டிக்குள் சிறுமியின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் சுனிலை பிடிக்க தகவல் தருவோருக்கு ரூ.25,000 பரிசும் அறிவிக்கப்பட்டது.

தப்பிச் செல்ல முயன்ற சுனிலை காவலர்கள் முற்றுகையிட்டு பிடிக்க முயன்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

இதற்கு பதிலடியாக காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl Body Found Flour Drum Uttar Pradesh Culprit Shot Dead Encounter


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->