பேட்டி பரபரப்பு! விஜய்க்கு என் ஆதரவு எப்போதும் உண்டு...! த.வெ.க.வில் இணையப்போகிறாரா...? - வாணி போஜன் அதிரடி பதில்!
Sensational Interview Vijay Always My Support She Joining TVK Vani Bhojan Gives Bold Reply
சின்னத்திரை உலகில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் வெற்றிகரமாக கால்பதித்தார்.
அதன் பின்னர் ‘மிரள்’, ‘மகான்’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த அவர், தற்போது அதர்வா நடிப்பில் உருவாகும் ‘வலை’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தஞ்சாவூர்யில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணி போஜன், பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடினார். அப்போது “எந்த நடிகருடன் இணைந்து நடிக்க விருப்பம்?” என்ற கேள்விக்கு, “எனக்கு விஜய்யுடன் நடிக்க ஆசை இருக்கு… ஆனால் அவர் நடிக்கணுமே!” என சிரிப்புடன் பதிலளித்து கவனம் ஈர்த்தார்.
இதற்கிடையில், விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதோடு, ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பதும் பேசுபொருளாக உள்ளது.
அதேபோல், “சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?” என்ற கேள்விக்கு, வாணி போஜன், “எனக்கு விஜய் மிகவும் பிடிக்கும். அவர் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி.
‘நீங்கள் எப்போது கட்சியில் இணையப் போகிறீர்கள்?’ என்று பலரும் கேட்கிறார்கள். அதைப்பற்றி பின்னர் சொல்கிறேன். ஆனால் இப்போதைக்கு எனது ஆதரவு விஜய்க்குத்தான்” என்று திறந்த மனதுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Sensational Interview Vijay Always My Support She Joining TVK Vani Bhojan Gives Bold Reply