#Breaking: திண்டுக்கல்: நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்ற 5 சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.. பெற்றோர்கள் கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்ற 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களில் சிறுவர்கள், குடும்பங்கள் சென்று நீர்த்தேக்கத்தை கண்டு ரசிப்பதும், அங்கு குளிப்பதும் வழக்கமான விஷயம். 

அந்த வகையில், ஆத்தூர் பகுதியை சார்ந்த நண்பர்களான நாகராஜ், லோகு, செல்வபரணி, பரத், சாரதி பிரபாகரன் ஆகிய 5 சிறுவர்கள் இன்று நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அனைவரும் நீரில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சிறுவர்களின் அலறலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, மீட்பு படையினர் சிறுவர்களின் உடலை மீட்டு வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிறுவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து வந்து பிள்ளைகளின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Attur Kamaraj Reservoir 5 Children Death Police Investigation 14 March 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->