கலைஞர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளிகள்!
Differently abled individuals submitted a petition to Minister Geethajeewan at the celebration of Kalaignars birthday
தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தூத்துக்குடி கலைஞர் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மீளவிட்டான் அருகில் உள்ள காமராஜ் நகர் முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையில் உள்ள 30 குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாநகர திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்த்சேகர் ஏற்பாட்டில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளுடன் ஊக்க தொகை வழங்கினாா்.
பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் கண்பாா்வையற்றோா் குழந்தை மணம் படைத்த கலைஞா் தமிழ்நாட்டில் உள்ள பலாின் இதயங்களிலும் இன்று வரை குடியிருந்து வருகிறாா். மாற்றுத்திறனாளிகள் கண்பாா்வையற்றோா் வாழ்வில் ஓளி விளக்கேற்றிய கலைஞாின் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் பணியாற்றும் தாங்கள் செய்த உதவிகளை என்னாலும் மறக்க மாட்டோம் என்று அமைச்சாிடம் பாடலாக பாடி புகழாரம் சோ்த்தனா்.
மாற்றுத்திறனாளிகள் கோாிக்கை மனுவை வழங்கினாா்கள். அதையும் நிறைவேற்றி தருவதாக அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தாா். விழாவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், வக்கீல் தனசேகர், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலகுருசாமி, கவுன்சிலர் கனகராஜ், வட்டப் பிரதிநிதிகள் அருணாச்சலம், பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
English Summary
Differently abled individuals submitted a petition to Minister Geethajeewan at the celebration of Kalaignars birthday