மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பா? - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

அதன்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். 

பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்னும் 10 சதவீதம் இருப்பதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாய்ப்பாக இன்று (பிப்ரவரி 28ம் தேதி) கடைசி நாள் என தமிழக மின்சாரத்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், மொத்தமுள்ள 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்குமாறு தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Did not extend for adhar with EB link senthil Balaji announce


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->