புஸ்சி ஆனந்தை சந்தித்தாரா சி. விஜயபாஸ்கர்? தவெகவில் இணையவுள்ளதாக தகவல்! தேதி குறிச்சாச்சாம்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் இல்லத்தில் சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிருப்தி மற்றும் உள்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை சி. விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்தார். இருப்பினும், இதுவரை அவர் எந்த அரசியல் கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை.

இந்நிலையில், வரும் ஜூன் 29ஆம் தேதி திருவான்மியூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், தனது ஆதரவாளர்களுடன் சி. விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருக்கு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கிய கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகம் அல்லது சி. விஜயபாஸ்கர் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சி. விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை தவெகவில் இணைத்தால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தவெக இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.

மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த ஐந்து தொகுதிகளும், திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did C Vijayabaskar meet bussy Anand Rumors suggest he is set to join TVK A date has reportedly been fixed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->