சம்மதம் கேட்ட டிடிவி., தலையசைத்த சின்னம்மா.. உற்சாகத்தில் காங்கிரஸ் தரப்பு.!  - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளரான டிடிவி தினகரனுடைய மகளது நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்று இருக்கின்றது. மாப்பிள்ளை குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கின்றனர்.

தமிழகத்தின் மறைந்த முதல்வரான ஜெயலலிதாவின் தோழி சின்னம்மா என்கிற சசிகலா. இவருடைய அக்கா மகனான டிடிவி தினகரன் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர் கே நகரில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அதிமுகவோடு ஏற்பட்ட பிளவு காரணமாக அமமுக தொடங்கியது.

அதற்கு பொதுச் செயலாளராக தற்போது டிடிவி தினகரன் இருக்கின்றார். இந்நிலையில், அவருடைய மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ராமநாத துளசிக்கும் நேற்று பாண்டிச்சேரியில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு பண்ணை வீட்டில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதில் அவர்களுடைய நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். மணமகன் ராமநாத துளசியும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகின்றார். கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர். 

கிருஷ்ணசாமியின் தந்தை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், முதலில் மாப்பிள்ளை வீட்டிலிருந்துதான் ஜெய ஹரிணியை பெண்கேட்டு தகவல் வந்துள்ளது, செய்தி வந்ததனை தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இதுகுறித்து சம்மதம் கேட்டுள்ளார் தினகரன். சின்னம்மாவின் சம்மதத்திற்கு பிறகு, நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே, வருகின்ற ஜனவரி மாதத்தில் சசிகலாவின் தலைமையில் இவர்களுடைய திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அமமகவினர் மற்றும் காங்கிரஸார் என இருதரப்பினரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhinakaran daughter marriage with congress family 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->