சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்…! வெள்ளியங்கிரி மலையில் எதிர்பாராத திடீர் மரணம்...!
devotee who went darshan Lord Shiva Unexpected sudden death Velliangiri Hill
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த ஹரிதாஸ் (48) என்பவர் தங்கபட்டறை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தீவிர சிவபக்தரான அவர், புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையை ஏறி தரிசனம் செய்ய முடிவு செய்தார்.
இதன்படி கடந்த 7-ஆம் தேதி தனது நண்பர் மாரியப்பனுடன் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்ற ஹரிதாஸ், அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையேற்றத்தை தொடங்கினார்.

இருவரும் முதல் மலையை ஏறிக் கொண்டிருந்தபோது ஹரிதாஸுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சில நொடிகளில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த வனத்துறையினர் ஹரிதாசை டோலி கட்டி மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு அவரை பரிசோதித்தபோது, ஹரிதாஸ் மலையிலிருந்து கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும், காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
devotee who went darshan Lord Shiva Unexpected sudden death Velliangiri Hill