குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்த வேண்டும் – துணை குடியரசு தலைவர்..! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்த வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிர கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாயினர். இந்நிலையில் இந்தியாவில் கோவீட் ஷீல்ட், கோவக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. 18 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
 
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

ஹைத்ராபாத்தில் உள்ள பாரத் பயொடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின் அங்குள்ள பணியார்களிடம் அவர் உரையாற்றினார்.  கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்வது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டு நம்மையும் நம்மை சுற்றியிருப்பவரையும் பாதுகாத்திட வேண்டும். 

குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தை விரைவாக கண்டறிவதன் மூலம் அவர்களை கொரோனா பாதிப்பில் இருந்து காத்திட இயலும். தற்போதுள்ள தளர்வுகளை மக்கள் தவறான முறையில் பயன்படுத்தாமல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மூன்றாம் அலையை நாம் வரவேற்க கூடாது எனவும் அவர் கூறினார்.

மேலும்; சர்வதேச நாடுகள் உலகின் மருந்தகம் என இந்தியாவை பாராட்டியுள்ளன.  50 % தடுப்பு மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்கின்றது. இந்திய மருந்து நிறுவனங்கள் உலகின் பொது மருந்துகளின் உற்பத்தியாளராக திகழ்கின்றன எனவும் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹமூத் அலி, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா யெல்லா, இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா யெல்லா, முழு நேர இயக்குநர் டாக்டர் கிருஷ்ண மோகன் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deputy President Of India Venkaiah Naidu Talks about Child Vaccination Manufacture Fast


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->