பல் மருத்துவ மாணவி விடுதியில் தற்கொலை – 2 பேராசியர்கள் மீது பகீர் புகார்!
Dental student commits suicide in the hostel serious complaint against 2 professors
உ.பி.யில் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 பேராசியர்கள் மீது பகீர் புகார் எழுந்துள்ளது.இதனால் ஆத்திரதமடைந்த மாணவர்கள் போராட்டம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் (BDS) 2ம் ஆண்டு படித்து வந்த குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி சர்மா (21), விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக் குறிப்பில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மகேந்தர் மற்றும் ஷைரி, மேலும் நிர்வாகம் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் எனவும் ஜோதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது.
போலீசார் ஜோதியின் தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில் மகேந்தர் மற்றும் ஷைரி ஆகியோரை கைது செய்தனர். மேலும், பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், அந்த இரண்டு பேராசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
Dental student commits suicide in the hostel serious complaint against 2 professors