வளர்ப்பு தாயை கொன்ற மகனுக்கு தூக்கு..கோர்ட் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


இந்திய பாரம்பரியத்தில் ஒரு தாய் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார், அவரது கொலை மன்னிக்க முடியாதது என்று வளர்ப்பு தாயை கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி  உஷா தேவி- புவேந்திர பச்சவுரி. இந்த தம்பதிக்கு  குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர்.அதன்படி 20 ஆண்டுகளுக்கு முன் குவாலியரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து தீபக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.தீபக் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து நல்லமுறையில் வளர்த்து வந்தனர்.


இந்தநிலையில் அவரது வளர்ப்பு தந்தை கடந்த 2021-ம் ஆண்டு இறந்துவிட்டார்.அதன்பிறகு தீபக் அவரது தந்தையின் வைப்புத்தொகை ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்தை எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.அது போதாமல் பின்னர் தனது வளர்ப்பு தாயின் கணக்கில் இருந்த ரூ.32 லட்சத்தை எடுக்க திட்டமிட்டார். சொகுசு வாழ்க்கை யாரைத்தான் விட்டுவைத்தது.அதற்காக கொலை செய்யவும் துணித்துவிட்டான்   தீபக்.

இந்தநிலையில் தாய் உஷா தேவியின் பணத்தை எடுக்க கேட்ட போது அவர்  சம்மதிக்கவில்லை. இதனால் அவரை  கடந்த ஆண்டு மே மாதம் தீபக் இரும்பு கம்பியால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். உடலை வீட்டு சுவரில் மறைத்து வைத்துவிட்டு போலீசாரிடம் காணவில்லை என புகார் அளித்தார். ஆனால் போலீசார் விசாரணையில் தீபக் தனது வளர்ப்பு தாயை கொலை செய்தததை கண்டுபிடுத்துவிட்டனர். இதை தொடர்ந்து அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.இந்தநிலையில்  இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 இன் கீழ் குற்றவாளி எனக் கண்டறிந்து, கூடுதல் அமர்வு நீதிபதி எல்.டி. சோலங்கி தீபக்கிற்கு தூக்கு தண்டனை விதித்தார்.

மேலும் இந்திய பாரம்பரியத்தில் ஒரு தாய் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகிறார், அவரது கொலை மன்னிக்க முடியாதது என்று கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death penalty for the son who murdered his adoptive mother Courts shocking verdict


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->