பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு.!

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியின் நான்கு ஆண்டு இளநிலை படிப்புக்கு சேர்வது போலவே, அதே படிப்பில் நேரடியாக இரண்டாமாண்டில் சேர்வதும் நடைமுறையில் உள்ளது. 

இந்த நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டய படிப்பு முடித்தவர்களும், இளங்கலை கணிதம் முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த லேட்டரல் என்ட்ரி விண்ணப்ப நடைமுறைகள், ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. இந்த நிலையில் இந்த இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி ஜூன் மாதம் 7 வரை லேட்டரல் என்ட்ரி பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில், இதற்கு என்று காலியாக இருக்கும் சுமார் 60 ஆயிரம் இடங்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் நிரப்பப்பட உள்ளன. 

ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் முடிந்த பின்னர் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் 31 அன்று வெளியிடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைமுறைகளில், ஆன்லைன் வாயிலாகவே மாணவர்கள் பங்கேற்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

date extened of later entry application engineering class


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->