அதிர்ச்சியில் வாடிக்கையாளர்! குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி...!
Customer in shock Dead lizard found in drinking water bottle
சென்னையில் புழல் பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் மனைவி சங்கீதா என்பவர் சென்னை மாநகராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராகவுள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்திலுள்ள கோவிலுக்கு சென்றனர்.

அப்போது பொன்னேரி பகுதியிலுள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அப்போது உணவு சாப்பிடும் சமையம் தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், காவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
English Summary
Customer in shock Dead lizard found in drinking water bottle