எப்ப பார்த்தாலும் அரை கரண்டு தான் வருது.. நிலங்களுக்கு நீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் வேதனை.! - Seithipunal
Seithipunal


சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் குறைந்தழுத்த மின்சார பிரச்சனையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமம் மழவராயநல்லூர். மழவராயநல்லூர் கிராமம் வழியாக அங்குள்ள முடிகண்டநல்லூர், சாந்திநகர், கூடலையாற்றூர் போன்ற 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வழித்தடம் செல்கிறது. 

இந்த மின்வழித்தடம் 60 வருடங்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட நிலையில், இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. பழைய மின்வழித்தடம் என்பதால் குறைந்தழுத்த மின்சார விநியோகம் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளது. மேலும், அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது.

பகல் வேலைகளிலும், இரவு வேலைகளிலும் என எந்த நேரத்திலும் குறைந்தழுத்த மின்சாரம் காரணமாக வீட்டில் உள்ள மின் பொருட்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாகவும், விவசாய நிலங்களில் உள்ள மோட்டார்களை இயக்க முடியாமல் தவித்து வருவதாகவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவில் குழந்தைகள் உறங்காமலும் தவித்து வருகின்றனர். 

மேலும், மழவராயநல்லூர் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்காமல் விட்டால், இதே நிலை தொடர்ந்தாள் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச வழியில்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்றும், எதிர்பார்த்த அளவு குருவை சாகுபடி இருக்காது என்றும், பயிர்கள் கருகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Sethiathoppu Malavarayanallur Villages Electric Issue 12 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->