கடலூர் : மருத்துவமனை படிக்கட்டில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை..!
cuddalore govt medical college hospital patient sucide in chithambaram
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே பெருந்துறை மேட்டு தெருவை சேர்ந்தவர் தவிட்டு மணி. சமீப காலமாக உடல் நிலை பாதிப்பால் அவதி அடைந்து வந்த இவர் கடந்த 10-ம் தேதி விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தவிட்டு மணி நேற்று காலை மருத்துவமனையில் படிக்கட்டு கைப்பிடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மருத்துவர் கிஷோர்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
cuddalore govt medical college hospital patient sucide in chithambaram