இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்..தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!
Sri Lanka Navy again misbehaves 14 fishermen from Tamil Nadu arrested
பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் ,நாகப்பட்டினம் ,வேதாரண்யம் ,புதுக்கோட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் என வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களை படகுகளையும் பறிமுதல் செய்தது சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை கடல் கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து உள்ளது, கடற்படையின் அட்டூழியம் ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் தற்போது மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்தநிலையில் இன்று இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணைக்காக புத்தளம் கடற்படை முகாமிற்கு மீனவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
English Summary
Sri Lanka Navy again misbehaves 14 fishermen from Tamil Nadu arrested