கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.!!
Cuddalore district schools and colleges holiday tomorrow
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். நாளை தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிற மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Cuddalore district schools and colleges holiday tomorrow