மாநிலத்திற்கே முன்மாதிரியாக, கடலூர் மாவட்டத்தில் வந்த அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா  வைரஸின் பரவலானது அதிகளவில் இருப்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி இரவு  முதல் அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக  பொதுமக்கள் நடமாடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது. 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதிலும் பொதுமக்கள் இயல்பாகவே சாலைகளில் நடந்து வருவதை காணமுடிகிறது. பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கடுமையான நடவடிக்கைகளை அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போதும், மக்கள் அதனை காது கொடுத்து கேட்பது போல தெரியவில்லை. 

குறிப்பாக சலுகை விலையில் இறைச்சி கிடைப்பதும் போதும், பொது விடுமுறை விட்டதும் போதுமென, புலால் உண்ணுவதில் ஆர்வம் கொண்டு குடும்பத்துடன் உண்டு மகிழ விருப்பப்பட்ட அசைவ வெறியர்கள், சனி ஞாயிறுகளில் இறைச்சி கடைகளில் குவிந்தது. இதனைக் கண்டு அச்சமுற்ற தமிழக அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.  

இந்த நிலையில் மாநிலத்திற்கு வழிகாட்டும் விதமாக கடலூர் மாவட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பினை கடலூர் மாவட்ட மக்கள் பெரும்பாலும் வரவேற்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore collector order to close meat shop on april 4 and 5


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->