14 வயது சிறுமி.. செல்போன் முழுவதும் இளம்பெண்கள் புகைப்படம்.. காமுகனுக்கு ஆதரவாக விசிக.. கொதித்தெழும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் பள்ளி ஆசிரியை, தனது மகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஆசிரியை விஜயதசமி சிறப்பு பூஜைக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். இவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பள்ளியில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு வந்து கதவை தட்டிய நிலையில், மாணவி பதற்றத்துடன் கதவை திறந்துள்ளார். மிகுந்த பதற்றத்தில் இருந்த மகளை கண்ட தாய், என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அப்போது சிறுமி படுக்கையறையை கைகாட்டி, அங்கு ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், படுக்கையறை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்கவே, அவர்கள் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று, குளியறையில் பதுங்கியிருந்த காமுகனை சுற்றிவளைத்து பிடித்தனர். 

பின்னர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில், விருத்தாச்சலம் அருகேயுள்ள பெரியவடவாடி கிராமத்தை சார்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் ஜெயக்குமார் (வயது 20) என்பது தெரியவந்துள்ளது. 

இவன், கடந்த ஆறு மாதமாக சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்த நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவக்கத்தில் காதல் கவிதைகளை அள்ளி தெளித்துள்ளான். இவனது காதல் வலையில் விழுந்த சிறுமியிடம், நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சந்திக்க வற்புறுத்தியுள்ளான். 

பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் இல்லாத நேரம் வீட்டிற்குள் புகுந்த கொடூரன், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்துள்ளான். பின்னர் இந்த வீடியோவை வைத்து தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளான். 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு அத்துமீறியதும் தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரின் அலைபேசியை காவல் துறையினர் சோதனை செய்கையில், பல பெண்களின் வாழ்க்கையை அவன் சீரழித்துள்ளதும் அம்பலமானது. 

இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் உள்ள பெண்களை குறிவைத்து காமுகன் நாடக காதல் வலையில் விழவைத்து, பின்னர் அவர்களை தனிமை பகுதிக்கு அழைத்து சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததும், ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமிகளை விடியோவை வெளியிட்டு குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டி பணிய வைத்துள்ளான். 

இதில், காமுகன் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான செய்தியை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி வாக்குவாதம் செய்ததாகவும், காமுகனின் மீது எவ்வித வழக்குப்பதிவு இருக்க கூடாது என்று காவல் துறை அதிகாரிகளையே மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

சிறுமியின் தாயார் கொடுத்த வழக்கில் காமுகன் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாடக காதல், ஒருதலை காதல் போன்ற கொடூரங்களால் பல பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதும், வாழ்க்கையை இழந்துள்ளதும் நினைவில் கொள்ள வேண்டியது.. இவ்வாறான குற்றங்களை செய்வதில் பலர் இளம் வயதினர் என்பதும், பாதிக்கப்படும் பெண்களும் இளம் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம் செய்து ஆறே மாதத்தில் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் என்று அவரை கொடூர கொலை செய்துவிட்டு, அடுத்த ஒரு வருடத்தில் மற்றொரு திருமணத்தை காமுகன்கள் அரங்கேற்றி வருவதாகவும், இவர்களின் கொட்டத்தை காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுத்து ஒழிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற கொடூரங்களை செய்யும் நபர்களை பாதுகாக்கவும், இவர்களை தூண்டிவிட்டு செயலை செய்யவும் அரசியல் கட்சியின் பின்புலம் இருப்பதாகவும் தெரியவருகிறது. 

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து, சாதியில்லாத சமூகம் என்ற பெயரில் அரசியல் செய்யும் இதெல்லாம் ஒரு பிழைப்பா? இதற்கு நாலுபேரிடம் ஏதேனும் வாங்கி குடித்துவிட்டு வயிறை நிறைத்துக்கொள்ளலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த காமுகன் குறித்து புகார் அளித்தால் விசாரணை செய்வதாக காவல் துறையினர் கூறியுள்ள நிலையில், பள்ளிகளின் வாசல்களிலும், கல்லூரிகளின் வாசல்களிலும் காவல் துறையினர் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தாலும், பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு குறித்து பெற்றோர்கள் எடுத்துரைத்து பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இன்றைய இணையதள உலகில் இருக்கும் போலியான நபர்களின் புகைப்படம் மற்றும் பதிவிடல் அடையாளத்தை வைத்து பின்புலம் அறியாமல் காதல் என்ற மாய வலையில் விழ வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Chidambaram Drama Lover Jayakumar Arrest by police abused girls life


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal