சிறுபான்மையினர் நலனில் கைவைப்பதா? FCRA சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெறப் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் ‘வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, 2026’-க்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், இந்த மசோதா முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட ஒரு "நேரடித் தாக்குதல்" என்று சாடியுள்ளார்.

கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் இதர மதச் சிறுபான்மையின அமைப்புகளைக் குறிவைத்து, அவர்களின் நிதி ஆதாரங்களை முடக்குவதே இந்தச் சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே வக்பு வாரிய சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்ற அரசு, இப்போது மற்ற சிறுபான்மையினரின் சேவைகளை முடக்கப் பார்க்கிறது என்று அவர் விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Defending Minority Rights CM Stalin Urges PM Modi to Scrap Controversial FCRA Amendment Bill


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->