தாயகம் திரும்பிய கணவரை, பிணமாக மீட்க சென்ற பெண்மணி.. விடுதியின் அலட்சியத்தால் அரங்கேறிய சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று கரோனாவால் 3,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 2,852 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது. இன்று 63 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 58,327 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,533 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்பி வரும் சூழலில், இவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பிய நபர் விடுதி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பலியாகி இருக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திட்டக்குடி நதிநத்தம் கிராமத்தை சார்ந்த நபர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இவரை அங்குள்ள ஹயாத் விடுதியில் தங்க வைத்து இருந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்பின்னர், தான் வந்த விபரத்தை தனது மனைவிக்கு தெரியப்படுத்திய நிலையில், இரண்டு நாட்களாக எந்த விதமான தகவலும் இல்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த மனைவி ஹோட்டல் ஹயாத் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்கையில் தகவல் இல்லை. திட்டக்குடி காவல் நிலையத்திலும் இது குறித்து முன்னதாக தெரிவிக்கையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருப்பார்கள்.. பயப்பட வேண்டும் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சூழலில், கடந்த 28 ஆம் தேதி மீண்டும் ஹயாத் நிர்வாத்திற்கு தொடர்பு கொள்கையில், அவர் இறந்துவிட்டதாகவும், உடல்நிலை சரியில்லாது இருந்து அவர் கூறியதாகவும், கடந்த ஒன்றரை நாட்களாக அவர் வெளியே வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஹயாத் நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிங்கப்பூரில் இருந்து வந்த நபர் கொரோனா இல்லாது மாரடைப்பால் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

ஹயாத் நிர்வாகத்தின் மாபெரும் அலட்சியத்தால் மாரடைப்பு ஏற்பட்டு கணவர் பலியான நிலையில், தனக்கு யாரும் இல்லை என்றும், தனக்கு ஒன்றரை வயது குழந்தை இருக்கிறது என்றும், நான் என்ன செய்வேன் என்றும், எனது கணவரின் உயிரிழப்பிற்கு அரசு மற்றும் ஹோட்டல் ஹயாத் நிர்வாகம் பதில் கூற வேண்டும் என்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore man died in Hotel Hyatt Chennai wife make video trending


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->