சென்னையில் கிரிப்டோ கரன்சி மெகா மோசடி...! - ரூ.30 கோடி சுருட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மாதம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஜான் சார்லஸ் ரட்சகன் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த நிறுவனம், சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை வசூலித்துவிட்டு, அசல் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டே இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நிறுவன இயக்குநர்கள் தலைமறைவாகினர்.

கம்பெனிகள் பதிவுத் துறையும் இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள நிர்வாகிகளைப் பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cryptocurrency Mega Scam Chennai Case Filed Against Private Financial Firm Swindling 30 Crores


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->