தந்தையின் பலவீனத்தை பயன்படுத்தி செய்த கொடூரம்…! - சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, சிறுவயது முதலே தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். ஆனால், தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், வேலைக்குச் செல்லும் நேரங்களில் சிறுமியை வீட்டிற்குள் பூட்டிவிட்டு செல்லுவது வழக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மது போதையில் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதும் அன்றாட நிகழ்வாக இருந்தது.இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்திய சிலர், சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஒருவரான நபர், தந்தைக்கு மது வாங்கித் தரும் பெயரில் வீட்டிற்கு சென்று, சிறுமிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சில சமயங்களில், தனது நண்பரையும் அழைத்து சென்று அவரும் அதேபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுமட்டுமல்லாமல், சிறுமியின் தந்தைக்கு தெரிந்த இன்னொரு நபரும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து எல்லை மீறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொடுமைகள் குறித்து சிறுமி பலமுறை தந்தையிடம் தெரிவித்தும், அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.இந்நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி தந்தை–மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாகி, ஆத்திரமடைந்த தந்தை தனது மகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேறு வழியின்றி, சிறுமி அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோபி அனைத்து மகளிர் காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா தலைமையிலான காவலர்கள், பொதுப்பணித்துறை ஊழியர், அவரது நண்பர் மற்றும் தந்தைக்கு அறிமுகமான மற்றொரு நபர் என மூவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சிறுமியின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த மனதை பதற வைக்கும் சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruelty that took advantage father weakness harassement that happened girl What happened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->