மதுரைக்கு வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
cricket player ms dhoni come in madurai
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியம் பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என்று பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இந்த ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது மதுரைக்கு வந்தடைந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
English Summary
cricket player ms dhoni come in madurai