அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாளுக்கான அரசாணை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு!! 
                                    
                                    
                                   Court Says Can not Interfere in Goverment Policy on Tamil Paper in Competitive Exams
 
                                 
                               
                                
                                      
                                            அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவது குறித்து தமிழக அரசு 2021ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதில், "தற்போது நடைமுறையில் பொது தமிழ், பொது ஆங்கிலத் தாள் உள்ளன. 
இனி வரும் காலங்களில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும் இந்த கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாவிட்டால் இதர தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதன் மீதான விசாரணையில், "குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு கொள்வது அவசியம், எனவே அவர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பதும் அவசியமாகிறது.
விண்ணப்பாதாரர்களின் கல்வித்தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ் மொழியில் 40சதவீத மதிப்பெண்கள் தான் தேர்ச்சிக்கு தேவை என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Court Says Can not Interfere in Goverment Policy on Tamil Paper in Competitive Exams