கடந்த டிசம்பரில் சென்னையை பதறவைத்த அமோனியா ஆலை மீண்டும் திறப்பா? வெளியான புது தகவல்!
Coromendal Factry reopen
அமோனியா வாயுக்கசிவு காரணமாக கடந்த 8 மாதங்களாக எண்ணூர் கோரமண்டல் அமோனியா ஆலை மூடப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் திறக்க திரைமறைவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்த ஆலையால் பாதிக்கப்பட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க, ஆலையை சுற்றியுள்ள 4 மீன்பிடி கிராமங்களுக்கு ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.35 லட்சமும் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதன் பின்னணியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சங்கரும், ஆலை நிர்வாகமும் இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனை எம்எல்ஏ சங்கரும், ஆலை நிர்வாகமும் தனித்தனியாக மறுத்துள்ள நிலையில், சென்னை எண்ணூர் ஆலையில் மீண்டும் உற்பத்தியை கோரமண்டல் நிறுவனம் தொடங்கியது.
இந்நிலையில், அம்மோனியா உற்பத்தியை தொடங்கவில்லை என்று கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பாஸ்போரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமில ஆலைகளின் செயல்பாடுகள் மட்டுமே தொடங்கியுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகள், ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் ஆலையின் செயல்பாடு தொடங்கி உள்ளது என்றும் கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கிய ஒரு சில அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்றும் கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.