கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்த கான்கிரீட் சுவர்: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி!
Concrete wall collapsed construction work killed Worker
வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணியின் போது சிமெண்ட் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை வழக்கம் போல் வடமாநில மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 பேர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் 20 அடி உயரத்தில் கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரும்பு தூண்கள் நகர்ந்ததால், சிமென்ட் கான்கிரீட் மேல் தளம் சரிந்து விழுந்தது. இதனை கவனித்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த மற்றொருவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Concrete wall collapsed construction work killed Worker