ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி - கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி - கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் அருகே நந்தனார் கோவில் பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வந்து தங்கினார்.

அதன்படி இன்று கோவில் பூஜையில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பூணூல் விழாவிலும் கலந்து கொண்டார். ஆளுநரின் வருகைக்காக சுமார் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் இடதுசாரி கட்சியினர் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் ஆளுநர் வெளியேற வேண்டும். பூணூல் விழா நடைபெற கூடாது" என்று முழக்கமிட்டனர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து குருபூஜை விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர். என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதற்காக பல்கலைக்கழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

communiest party protest in cuddaloore against governor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->