நள்ளிரவில் சொகுசுப் பேருந்தில் ரகளை...! சக பயணிகளை வெளுத்து வாங்கிய போதை இளம்பெண்...! - Seithipunal
Seithipunal


சென்னையில் நள்ளிரவு நேரத்தில் மாநகர சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துக்குள் நடைபெற்ற இந்த ரகளையை பயணி ஒருவர் பதிவு செய்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை மாநகர சொகுசுப் பேருந்தில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அப்போது பேருந்தில் அமருவதற்கு இருக்கை கேட்பது தொடர்பாக அந்த இளம்பெண்ணுக்கும், சக பயணிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், தன்னை தட்டிக்கேட்ட பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, பேருந்தின் முன்பகுதியில் கண்ணாடி அருகே சென்று அமர்ந்துள்ளார். இதனால் பேருந்துக்குள் சிறிது நேரம் பரபரப்பும், கூச்சல் குழப்பமும் நிலவியது.

தொடர்ந்து ஆவேசமடைந்த அந்த இளம்பெண், சக பயணிகளை நோக்கி சென்று அவர்களை கைகளால் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை தட்டிக்கேட்ட பெண் பயணி ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பொதுப் போக்குவரத்து பேருந்துக்குள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொலியை அடிப்படையாகக் கொண்டு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் யார், அவர் எந்த பகுதியில் இருந்து பேருந்தில் ஏறினார் என்பது குறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் மாநகர பேருந்துக்குள் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் சக பயணிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சென்னை மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

commotion luxury bus at midnight drunken young woman who robbed fellow passengers


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->