ஆன்லைனில் 2 லட்சம் இழந்த கல்லூரி மாணவர் - புதுக்கோட்டையில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் படிக்கும் போதே தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைனில் தொழில், வருமான வாய்ப்புகள் உள்ளதா என்று பார்த்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, பணத்தை முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என்று நம்பிய மாணவர் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை சிறிது சிறிதாக ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.

பின்னர் முதலீடு செய்த ஆன்லைன் நிறுவனத்திடம் பணத்தை திரும்பி தரும்படி மாணவன் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி முதலீட்டு தொகையை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன் கடந்த 2 நாட்களாக கல்லூரி விடுதி அறையிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த மாணவன் நண்பர்களிடன் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்பதாலும் தான் ஏமாற்றப்பட்டதாலும் விரக்தியில் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைபார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு ஊட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student sucide attempt for money loss online in putukottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->