திண்டிவனம் || எமனாக வந்த மாடு - தறிக்கொட்டு ஓடிய டிராக்டரால் பறிபோன கல்லூரி மாணவர் உயிர்.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் || எமனாக வந்த மாடு - தறிக்கொட்டு ஓடிய டிராக்டரால் பறிபோன கல்லூரி மாணவர் உயிர்.!

திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் நரேஷ் குமார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவர், தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு  டிராக்டரில் சென்றார். அதன் படி அவர், பைடப்பாக்கத்தில் இருந்து லாலாபேட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடு சாலையின் குறுக்கே வந்துள்ளது. 

இதைப்பார்த்த நரேஷ் குமார் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதில் ட்ராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நரேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார், விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student died truck accident in dinduvanam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->