ஆலந்தூர் அருகே விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி.!! - Seithipunal
Seithipunal


சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவரது மகன் கிஷோர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கிஷோர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஏனோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அண்ணாநகரில் உள்ள நண்பர்களை பார்க்க புறப்பட்டார்.

அதன் படி அவர்கள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானா வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே உள்ள மெட்ரோ ரெயில்நிலைய தூணில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயம் அடைந்த கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த ஏனோசை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student died for accident in alanthur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->