கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்திய சீனியர் மாணவர்கள் - போலீசார் வலைவீச்சு.!
college senior students ragging junior students in chennai
சென்னையில் உள்ள புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கல்லூரியில் தனது சீனியர் மாணவர்கள் மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, கடுமையாக தாக்கி பணம் பறித்ததாகவும், சீனியர் மாணவர்கள் தொடர்ந்து கொடுமை செய்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த விவகாரத்தில் சீனியர் மாணவர்கள் மூன்று பேர் மீது ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மாணவர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருக்கும் அந்த மூன்று பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
college senior students ragging junior students in chennai