10 வயது சிறுமியை கத்தி முனையில் சீரழித்த 55 வயது கொடூரன்.. உடந்தையாக எச்.எம் மனைவி..! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியை சார்ந்தவன் தங்கவேல் (வயது 55). இவன் அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர். இவனது மனைவி ஐய்யம்மாள் (வயது 55). ஐய்யம்மாள் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

தங்கவேல் தினமும் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துவந்து விடுவதும், பின்னர் மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளான். இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தின் போது பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமியை, தங்கவேல் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு ஏமாற்றி அழைத்து சென்றுள்ளான். 

அங்கு வைத்து சிறுமியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். தனக்கு நடந்தது குறித்து சிறுமி பள்ளியின் தலைமை ஆசிரியையான ஐயம்மாளிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட ஐய்யம்மாள் கணவனின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதை விட்டுவிட்டு, மாணவியை அடித்து இருக்கிறார். 

அவரும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நிலையில், சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வந்துள்ளார். தற்போது பள்ளிகள் இணையத்தளம் மூலமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுமி தான் அந்த பள்ளிக்கு செல்ல போவதில்லை என்றும், வேறொரு பள்ளிக்கு செல்வேன் என்றும் வீட்டில் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

விபரீத விஷயத்தை அறியாத பெற்றோரும், பள்ளிக்கு சென்று மாற்று சான்றிதழ் கேட்கவே தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சிறுமி வேறு வழியின்றி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் கோவை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். விஷயத்தை அறிந்ததும் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு வந்த அதிகாரி விசாரணை செய்துவிட்டு பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுகன் தங்கவேல் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஐய்யம்மாள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Pollachi 10 year school girl sexual abuse by Lady Head Master Husband


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal